Paristamil Navigation Paristamil advert login

தொழில்களை குழி தோண்டி புதைக்க நினைக்கும் தி.மு.க., அரசு

தொழில்களை குழி தோண்டி புதைக்க நினைக்கும் தி.மு.க., அரசு

16 ஐப்பசி 2023 திங்கள் 06:14 | பார்வைகள் : 3288


ஒரு பக்கம் பிரதமர் மோடி, 2 லட்சம் கோடி ரூபாய், 'முத்ரா' கடன் கொடுத்து, சிறு, குறு, நடுத்தர தொழில்களை வளர்க்கப் பார்க்கிறார். இன்னொரு பக்கம், திராவிட மாடல் தி.மு.க., அரசு, தொழில்களை குழி தோண்டி புதைக்க நினைக்கிறது, என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறினார்.

கோவையில் அண்ணாமலை அளித்த பேட்டி:

லோக்சபா தேர்தலுக்காக, தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும், பா.ஜ., சார்பில், பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் அந்தந்த பகுதியில் உள்ள பிரச்னைகளை, மத்திய அரசின் கவனத்திற்கு எடுத்துச் சென்று தீர்க்க முயல்வர். 

கடமை

மக்கள் வரிப்பணத்தை பயன்படுத்தும் தி.மு.க.,வை எதிர்த்து, ஆக்கப்பூர்வமாக தவறுகளை சுட்டிக் காட்டுவது எதிர்க்கட்சிகளின் கடமை. பிரதமர் மோடி ஆட்சியின் மீதான பொய்யான குற்றச்சாட்டுகளை உடைத்து, உண்மையை மக்களுக்கு விளக்குவது, பா.ஜ.,வின் பணி.

இந்தியா எப்போதுமே, பாகிஸ்தான் விளையாட்டு வீரர்களுக்கு அதிகபட்ச மரியாதை அளித்து வருகிறது. விளையாட்டை விளையாட்டாகவே தான் பார்க்க வேண்டும். சில நேரங்களில் உணர்ச்சி வசப்படுவதும் உண்டு. இதை, உதயநிதி அரசியலாக்க அவருக்கு அருகதை கிடையாது. 

இந்தியாவை பொறுத்தவரை, ஒரு வலுவான, தைரியமான முடிவு எடுக்கும் ஆட்சி வேண்டும். நாட்டை இது அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லும். 

தீவிரவாதத்தை தீவிரவாதமாக பார்க்க வேண்டும்; மதமாக பார்க்கக் கூடாது. தீவிரவாதத்துக்கு மதச்சாயம் பூசுவதை, பா.ஜ., விரும்பவில்லை. மக்களின் உயிரை எடுக்கத் துணிந்த பயங்கரவாதிகளுக்கு, மன்னிப்பே கிடையாது. அவர்கள் சிறையில் தான் இருக்க வேண்டும்.

அவர்களுக்கு பொதுவெளியில் இடம் இல்லை என்பது தான் எங்களது கருத்து. கோவையில் இன்னும் தீவிரவாதத்துக்கான கட்டமைப்பு அழிக்கப்படவில்லை. சிறையில் உள்ள பயங்கரவாத கைதிகளை விடுவிக்க, கவர்னர் கையெழுத்து போட மாட்டார் என்ற நம்பிக்கை உள்ளது.

உண்ணாவிரதம்

சிறு, குறு, நடுத்தர தொழில் துறையினர், மின் கட்டணத்தை குறைக்கக் கோரி ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் இருந்தனர்; மனு கொடுத்தனர். தொழில்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன. புதிதாக யாரும் தொழில் தொடங்க முடியாது.

ஒரு பக்கம் பிரதமர் மோடி, இரண்டு லட்சம் கோடி ரூபாய், 'முத்ரா' கடன் கொடுத்து, சிறு, குறு நடுத்தர தொழில்களை வளர்க்கப் பார்க்கிறார்.

இன்னொரு பக்கம், திராவிட மாடல் தி.மு.க., அரசு, தொழில்களை குழி தோண்டி புதைக்க நினைக்கிறது. உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை வாபஸ் பெற வேண்டும். இவ்வாறு அண்ணாமலை கூறினார்.

சபாநாயகர் சுய பரிசோதனை

செய்து கொள்ள வேண்டும்'''தமிழக சட்டசபையில், சபாநாயகர் எல்லா கட்சியினரையும், சமமாக நடத்த வேண்டும். எம்.எல்.ஏ., வானதி பேசும் போது மைக்கை, 'ஆப்' செய்கின்றனர்.''சபாநாயகரே விவாதத்தில் பேசுவது போன்று, ஒரு கருத்தை திணிக்கிறார். எல்லாருக்கும் சமமாக வாய்ப்பும், நேரமும் தரப்படுகிறதா என்பதை, அவர் சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும்,'' என்றார் அண்ணாமலை.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்