இலங்கை அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்

16 ஐப்பசி 2023 திங்கள் 03:07 | பார்வைகள் : 8368
அடுத்த மாதம் முன்வைக்கப்படவுள்ள 2024ஆம் ஆண்டுக்கான பாதீட்டில் அரச பணியாளர்களுக்கான வேதனம் அதிகரிக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
நாவலப்பிட்டி பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாம் கட்ட நிதியை பெற்றுக்கொள்வதற்கான இணக்கம் அடுத்த மாதத்தில் எட்டப்படும்.
இந்தநிலையில், அபிவிருத்தி வேலைத்திட்டத்தை மீள ஆரம்பிப்பதன் மூலம் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
இலங்கை கடந்த ஆண்டை விட தற்போது பொருளாதாரத்தில் மீட்சியடைந்துள்ளது.
இந்தநிலையில், அடுத்த மாதம் முன்வைக்கப்படவுள்ள 2024ஆம் ஆண்டுக்கான பாதீட்டில் அரச பணியாளர்களுக்கான வேதனத்தை அதிகரிப்பதற்கான சாத்தியம் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025