அமெரிக்காவில் திறந்து வைக்கப்பட்ட அம்பேத்கர் சிலை!
16 ஐப்பசி 2023 திங்கள் 08:27 | பார்வைகள் : 2881
அமெரிக்காவில் மிகவும் உயரமான 19 அடிக்கொண்ட அம்பேத்கரின் சிலை திறந்துவைக்கப்பட்டுள்ளது.
1891-ஆம் ஆண்டு பிறந்த பி.ஆா். அம்பேத்கா், இந்திய அரசியல் நிா்ணய சபையில் அரசமைப்பு வரைவுக் குழுத் தலைவராக இருந்தார்.
இதன் காரணமாக அரசமைப்பை வடிவமைப்பத்தில் முக்கிய பங்காற்றினார்.
இவரை நினைவுக்கூறும் வகையில் அமெரிக்காவின் மேரிலேண்ட் மாகாணத்தின் அக்கோகீக் நகரில் 13 ஏக்கர் பரப்பளவில் ‘சமத்துவத்தின் சிலை’என அம்பேத்கரின் சிலை நிறுவப்பட்டுள்ளது.
அம்பேத்கர் புத்த மதத்தில் தன்னை இணைத்துக் கொண்ட நாளான அக்டோபர் 14 ஆம் திகதி இந்தச் சிலை திறக்கப்பட்டுள்ளது.
இந்த உயரம் கூடிய சிலையை பிரபல சிற்பி ராம் சுதார் வடிவமைத்துள்ளார்.
மேலும் இவர் குஜராத் நர்மதா ஆற்றங்கரையில் நிறுவப்பட்டுள்ள ‘ஒற்றுமையின் சிலை’ என்றழைக்கப்படும் சர்தார் வல்லபபாய் படேல் சிலையை வடிவமைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.