Paristamil Navigation Paristamil advert login

இஸ்ரேல்- பாலஸ்தீனிய போரை அன்றே கணித்த பாபா வாங்கா...

இஸ்ரேல்- பாலஸ்தீனிய போரை அன்றே கணித்த பாபா வாங்கா...

16 ஐப்பசி 2023 திங்கள் 08:51 | பார்வைகள் : 1624


காசா மீது இஸ்ரேலும், இஸ்ரேல் மீது ஹமாஸ் படையினரும் மாறி மாறி தாக்குதலை நடத்திக்கொண்டு இருக்கின்றார்கள் என்பது யாரும் அறிந்த விடயமே. ஆனால் இந்நிகழ்வானது நடக்கவிருப்பதை அன்றே பாபா வாங்கா கணித்துள்ளார்.

நம்மில் பலருக்கு எதிர்காலத்தில் என்ன விடயங்கள் எல்லாம் நம்வாழ்வில் நடக்கவிருகின்றது என்று பற்றி தெரிந்துக்கொள்வதற்கு மிகவும் ஆர்வமாக இருக்கும்.

பலர் ஜாதகம், ஜோசியம், டாரோட் போன்ற பல வழிகளில் எதிர்காலத்தை கணித்துக்கொள்கிறார்கள். இவ்வாறு கணிக்கப்படும் ஒவ்வொரு விடயங்கள் நிகழ்ந்தாலும் ஒரு சில விடயங்கள் நடக்காமலே இருக்கும். 

ஆனால் பாபா வாங்கா கூறிய பல விஷயங்கள் இன்றும் அப்படியே நடக்கையில் நம்மில் பலர் மிரளத்தான் செய்கிறார்கள்.

அதன்படி தற்போது காசா மீது இஸ்ரேலும், இஸ்ரேல் மீது ஹமாஸ் படையினரும் மாறி மாறி தாக்குதலை நடத்திக்கொண்டு இருக்கும் நிகழ்வை பாபா வாங்கா ஏற்கனவே கணித்துள்ளார்.

பாபா வாங்கா
பாபா வாங்கா என்பவர் தனது 12 ஆவது வயதிலேயே மின்னல் தாக்கி தனது கண் பார்வையை இழந்தார். அன்றிலிருந்து இவர் உலகின் பல விடயங்களையும் கணிக்க தொடங்கியுள்ளார்.

இரட்டை கோபுரம் முதல் பேரரசி டயானா மரணம் வரை பல விடயங்களை இவர் கணித்துள்ளார். இவர் கணித்த ஒவ்வொரு விடயமும் அவ்வாறே நடந்தும் உள்ளது.

1996 ஆம் ஆண்டு மறைந்த இவர் 111 ஆண்டுகளுக்கு முன் செய்தார் என்னவெல்லாம் நடக்கும் என்பதை கணித்துள்ளார். அதில், 2023 மற்றும் அதற்குப் பிறகு வரும் காலங்களில் நடக்கப்போகும் பல விடயங்களையும் கணித்துள்ளார் எனலாம்.

அதில் 2023ல் பூமி தனது சுற்றுப்பாதையை மாற்றும் என்றும் அதன் விளைவுகளை உலகம் முழுவதும் அனுபவிக்க நேரிடலாம் எனவும், இதனால் பூமியில் வாழும் விலங்கினங்களுக்கு இது எவ்வளவு பெரிய சேதத்தை ஏற்படுத்தும் என்பதை மதிப்பிட முடியாது என்று கணித்துள்ளார்.

இவரின் இக்கணிப்புப்படி உலகின் பல பகுதிகளில் சூரிய புயல் ஏற்படும் என்றும், இந்த புயல் பல நாடுகள் அழிவதற்கு வழிவகுக்கும் எனவும் எச்சரித்துள்ளார்.

மேலும், 2023ல் பெரிய போர் நடக்கலாம் என்று பாபா வாங்கா கணித்துள்ளார். உலகின் பெரும்பாலான நாடுகள் இரண்டு பிரிவுகளாகி இந்த போரை நிகழ்த்தும் எனவும் கூறியுள்ளார். 

இதனடிப்படையில் பார்த்தால், ரஷ்யா-உக்ரைன் போர் இந்த ஆண்டு தொடங்கவில்லை என்றாலும், பாலஸ்தீனத்தில் இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே போர் ஆரம்பிக்கப்பட்டது.

பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேலின் மீது கடந்த சனிக்கிழமை 5000க்கும் மேற்பட்ட ராக்கெட்டுகளை ஏவி தாக்குதலை தொடங்கினர்.

இதையடுத்து உடனடியாக அவசர நிலை பிறப்பிக்கப்பட்டு, போர் பிரகடனத்தை இஸ்ரேல் அறிவித்தது.

ஹமாஸ் அமைப்பினர் பதுங்கி இருந்து செயல்படும் இடம் என தெரிவித்து பாலஸ்தீனத்தின் காசா பகுதி மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதலை நடத்தியது.

இதன்போது இஸ்ரேலிய ராக்கெட்டுகளால் காசா நகரம் முழுவதும் சூறையாடப்பட்டது. இதனால் பல உயிர்கள் காவு வாங்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் பாபா வாங்க கணித்த விடயங்களில், 2023-ல் பயங்கர வெள்ளம் வரும் என எச்சரித்துள்ளார். அதுப்போலவே உலகின் பல நாடுகள் வெள்ளத்தை சந்தித்துள்ளன.

சமீபத்தில் சிக்கிம் மேக வெடிப்பு காரணமாக கடுமையான வெள்ளத்தை சந்தித்தது. இதில் பலர் தனது உயிரையும் இழந்துள்ளார்.  

மேலும் பாபா வாங்கா கணித்துள்ள ஒவ்வொரு விடயமும் நடந்துக்கொண்டே இருகின்றது. இதை பாபா வாங்காவை பின்பற்றுபவர்கள் நம்புகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.  

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்