சகல collèges மற்றும் lycées மாணவர்கள் வெள்ளை ரோஜாக்களோடு அஞ்சலி. 16/10/2020
16 ஐப்பசி 2023 திங்கள் 09:12 | பார்வைகள் : 4628
இன்று பிரான்சில் நாடுமுழுவதும் உள்ள 'collèges' இடைநிலை பள்ளி மற்றும் 'lycées' உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் காலை 10:00 மணிக்கு தங்கள் தங்கள் பாடசாலைகளில் ஒன்று கூடியுள்ளனர். அவர்களும், ஆசிரியர்களும, கடந்த வெள்ளிக்கிழமை பயங்கரவாத தாக்குதலால் படுகொலை செய்யப்பட்ட பேராசிரியர் Dominique Bernard, மற்றும் 16/10/2020 இற்றைக்கு மூன்று ஆண்டுகளுக்கு முன் பயங்கரவாதியால் கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்ட பேராசிரியர் Samuel Paty பற்றிய ஆரோக்கியமான உரையாடல்களை மேற்கொண்டு வருகின்றனர். இன்று வழமையான வகுப்புகள் ரத்து செய்ய பட்டுள்ளது.
பின்னர் மாலை( 14:00 )இரண்டு மணிக்கு பிரான்சின் சகல பாடசாலைகளிலும் நகர சபைகளிலும் ஒரு நிமிட மவுன அஞ்சலி செலுத்தப்பட இருக்கிறது.
இந்த நிலையில் இன்று காலை 8 மணியிலிருந்து கடந்த வெள்ளிக்கிழமை இஸ்லாமிய பயங்கரவாதியால் படுகொலை செய்யப்பட்ட பேராசிரியர் Dominique Bernard அவர்களுக்கான சிறப்பு மரியாதை வணக்க நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்று வருகிறது. Arras நகரில் உள்ள அனைத்து collèges' இடைநிலை பள்ளி மற்றும் 'lycées' உயர்நிலைப் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் வெள்ளை ரோஜா ஏந்திய வண்ணம் தங்கள் மலர் வணக்கத்தை செலுத்தி வருகின்றனர்.
அங்கு மலர்வணக்கம் செலுத்த வந்த மாணவர்கள் கருத்து தெரிவிக்கையில், ஆசிரியர்கள் மீது பயங்கரவாத தாக்குதல்கள், படுகொலைகள், கொலை மிரட்டல்கள், புரிவது ஒரு அருவருக்கத்தக்க விடயம் எனவும், இதை தாங்கள் வெறுப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.