இலங்கையில் போதைப்பொருளுக்கு அடிமையான தம்பதியின் அதிர்ச்சி செயல்
16 ஐப்பசி 2023 திங்கள் 10:15 | பார்வைகள் : 8403
கைக்குண்டைக் காட்டி பல வீடுகளில் கொள்ளையடித்தார் என சந்தேகிக்கப்படும் ஒருவர் படல்கமவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேக நபர் இரவு வேளைகளில் கைக்குண்டை காட்டி மக்களை அச்சுறுத்தி அப்பகுதியில் உள்ள பல வீடுகளில் கொள்ளையடித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபரும் அவரது மனைவியும் போதைப்பொருளுக்கு அடிமையாகி உள்ளதாகவும் கொள்ளையடிக்கப்பட்ட பெறுமதியான பொருட்களை விற்று அந்தப் பணத்தில் போதைப்பொருள் கொள்வனவு செய்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
சந்தேக நபர் விசாரணையின் போது, கொள்ளையிடப்பட்ட தங்க நகைகளை தனது மனைவி அடகு வைத்து பணத்தை பெற்றதாக தெரிவித்துள்ளார்.


























Bons Plans
Annuaire
Scan