பிரான்சில் இருந்து 193 பேரை நாடு கடத்த திட்டம்!
16 ஐப்பசி 2023 திங்கள் 14:02 | பார்வைகள் : 7691
பிரான்சில் இருந்து 193 பேரை வெளியேற்றப்பட உள்ளதாக அறிய முடிகிறது. பல்வேறு வகைகளில் அடிப்படை வாத செயற்பாடுகளில் ஈடுபட்டவர்களே வெளியேற்றப்பட உள்ளதாக அறிய முடிகிறது.
இன்று திங்கட்கிழமை காலை பாதுகாப்புச் சபை கூட்டத்தில் பங்கேற்ற உள்துறை அமைச்சர் Gérald Darmanin, சந்திப்பின் பின்னர் இது குறித்து தெரிவித்தார். மதவாதச் செயற்பாடுகளில் ஈடுபட்ட 193 வெளிநாட்டவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள் பல்வேறு சூழ்நிலைகளில் வெவ்வேறு விதமான வெறுக்கத்தக்க செயல்களில் ஈடுபட்டுள்ளதாகவும், ஒவ்வொரு வழக்கினையும் தனித்தனியாக ஆராய்ந்து வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
அதேவேளை, நாடு முழுவதும் 2,852 பேர் கண்காணிப்பின் கீழ் உள்ளதாகவும், அவர்களில் 82 பேர் தற்போது காவல்துறையினரின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.