மார்பக புற்றுநோயின் அறிகுறிகள் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்!
16 ஐப்பசி 2023 திங்கள் 15:03 | பார்வைகள் : 2882
மார்பக புற்றுநோய்க்கான விழிப்புணர்வு மாதமாக அக்டோபர் மாதம் கொண்டாடப்படுகிறது. உலக அளவில் உள்ள பெண்களை பெரிய அளவில் பாதிக்கக்கூடிய மார்பக புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இதன் நோக்கமாகும். வயது அல்லது பாலினத்தை பொருட்படுத்தாமல் மார்பக புற்றுநோய் எந்த ஒரு நபரையும் தாக்கக்கூடிய மிக மோசமான ஒரு நோய்.
ஆரம்பகாலத்தில் நோயை கண்டறிவது வெற்றிகரமான சிகிச்சைக்கு முக்கியமான ஒரு விஷயமாக கருதப்படுகிறது. எனவே நாம் எதார்த்தமாக தவிர்க்க கூடிய சில அறிகுறிகள் கூட மார்பக புற்றுநோய்க்கான அறிகுறியாக இருக்கலாம். அதுபோன்று சில அறிகுறிகள் குறித்து இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
மார்பகம் அல்லது அக்குள் பகுதியில் கட்டிகள் ஏற்படுவது மார்பகப் புற்றுநோய்க்கான மிகவும் பொதுவான ஒரு அறிகுறி. அனைத்து கட்டிகளும் புற்றுநோய் கட்டிகளாக இருக்காது என்றாலும் கூட புதிதாக அல்லது வழக்கத்திற்கு மாறாக தோன்றக்கூடிய கட்டிகள் குறித்து உங்கள் மருத்துவரிடம் ஆலோசிப்பது நல்லது.
மார்பகத்தின் அளவு அல்லது வடிவத்தில் ஏற்படும் மாற்றங்கள்: ஒரு மார்பகத்தை விட மற்றொரு மார்பகம் பெரியதாக காட்சியளிப்பது அல்லது மார்பகத்தின் வடிவத்தில் ஏதேனும் மாற்றம் ஏற்படுவது போன்ற அறிகுறிகளை நீங்கள் அலட்சியமாக கருத வேண்டாம்.
மார்பகத்தை சுற்றி உள்ள தோலில் ஏதேனும் வழக்கத்திற்கு மாறான மாற்றங்கள் ஏற்படுகிறதா என்பதை கவனியுங்கள். சிவத்தல், குழிகள், சுருக்கம் அல்லது சருமம் ஆரஞ்சு தோல் போல காட்சியளித்தல் போன்ற சில அறிகுறிகள் இதில் அடங்கும்.
முளைக்காம்பில் ஏற்படும் மாற்றங்கள்: முளைக்காம்பு உள்நோக்கி திரும்பி இருந்தாலோ அல்லது தாய்ப்பால் தவிர மார்பகத்தில் இருந்து வேறு ஏதேனும் திரவங்கள் வெளியேறினாலோ அல்லது முளைக்காம்பில் வலி இருந்தாலோ இது மார்பக புற்றுநோய்க்கான அறிகுறிகளாக இருக்கலாம்.
திடீரென்று தொடர்ச்சியாக விவரிக்க முடியாத ஒரு வலியை மார்பகத்தில் நீங்கள் அனுபவிக்கிறீர்கள் என்றால் அதனை அலட்சியமாக கருதாமல் உடனடியாக மருத்துவரை சந்திக்கவும்.
முளைக்காம்பு அல்லது மார்பகத்தில் ஏற்படும் உணர்வுகள்: உங்களது முளைக்காம்பு அல்லது மார்பகத்தில் விவரிக்க முடியாத வெப்பம், அரிப்பு அல்லது எரிச்சல் போன்றவற்றை உணர்ந்தால் அது மார்பக புற்றுநோயுடன் தொடர்புடைய அறிகுறிகளாக கூட இருக்கலாம்.
மார்பகம் திடீரென்று சிவப்பு அல்லது ஊதா நிறத்தில் மாறினால் உடனடியாக மருத்துவரை ஆலோசிக்கவும்.
மார்பகத்தின் நிறத்தில் ஏற்படும் மாற்றங்கள்: மார்பகம் திடீரென்று சிவப்பு அல்லது ஊதா நிறத்தில் மாறினால் உடனடியாக மருத்துவரை ஆலோசிக்கவும்.
மார்பகம் மற்றும் அக்குள் பகுதியில் ஏதேனும் வீக்கத்தை காண்கிறீர்கள் என்றால் உடனடியாக மருத்துவரிடம் அதனை தெரிவிக்கவும்.
வீக்கம்: கட்டிகள் எதுவும் இல்லாவிட்டாலும் கூட மார்பகம் மற்றும் அக்குள் பகுதியில் ஏதேனும் வீக்கத்தை காண்கிறீர்கள் என்றால் உடனடியாக மருத்துவரிடம் அதனை தெரிவிக்கவும்.
விவரிக்க முடியாத அளவிற்கு உடல் எடை குறைதல்: உடல் எடை குறைவதற்கு பல்வேறு வகையான காரணங்கள் இருக்கலாம் என்றாலும் கூட இது மார்பக புற்றுநோய்க்கான ஒரு அறிகுறியாக இருப்பதால், உங்கள் உடல் எடை திடீரென்று குறைவதற்கு என்ன காரணம் என்பதை ஆராய்ந்து தெரிந்து கொள்வது அவசியம்.
ஏற்கனவே உங்களது அம்மா, உடன் பிறந்தவர்கள் அல்லது உங்களது மகள் போன்றவர்களுக்கு மார்பக புற்றுநோய் ஏற்பட்டிருந்தால் உங்களுக்கும் அது ஏற்படுவதற்கான அதிக வாய்ப்புகள் உள்ளது. எனவே உங்களது குடும்ப வரலாறு குறித்து மருத்துவர் உடன் ஆலோசிப்பது அவசியம்.