Arras தாக்குதல் - இறுதிச்சடங்கில் கலந்துகொள்ளும் ஜனாதிபதி மக்ரோன்!

16 ஐப்பசி 2023 திங்கள் 16:24 | பார்வைகள் : 6786
Arras நகரில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலில் கொல்லப்பட்ட ஆசிரியர் Dominique Bernard இன் இறுதிச்சடங்கில் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் கலந்துகொள்ள உள்ளார்.
இறுதிச்சடங்கு நாளை மறுநாள் வியாழக்கிழமை (ஒக்டோபர் 19) Arras நகரில் உள்ள தேவாலயத்தில் இடம்பெற உள்ளது. குடும்ப உறுப்பினர்களும், சில அரசியல் தலைவர்களும் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ள இந்த இறுதிச் சடங்கில் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் கலந்துகொள்ள உள்ளார்.
காலை 10 மணி அளவில் அவரது இறுதிச் சடங்கு இடம்பெற உள்ளது. ஜனாதிபதி வியாழக்கிழமை காலை பா து கலே சென்றடைவார் என அறிய முடிகிறது.