Paristamil Navigation Paristamil advert login

Sevran : இளைஞன் மீது துப்பாக்கிச்சூடு - இருவர் தப்பி ஓட்டம்!

Sevran : இளைஞன் மீது துப்பாக்கிச்சூடு - இருவர் தப்பி ஓட்டம்!

16 ஐப்பசி 2023 திங்கள் 17:05 | பார்வைகள் : 11333


Sevran நகரில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் 17 வயதுடைய இளைஞன் ஒருவர் காயமடைந்துள்ளார்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 11.30 மணி அளவில் குறித்த இளைஞன் வீதியில் நடந்து சென்றுகொண்டிருக்கும் போது, அவருக்காக காத்திருந்த இருவர், இளைஞனை வழிமறித்து அவரை துப்பாக்கியால் சுட்டுள்ளனர். காலில் தொடைப்பகுதியில் பலத்த காயமடைந்த நிலையில் இளைஞன் மீட்கப்பட்டு Robert-Ballanger மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

துப்பாக்கிச்சூடு நடத்திய இருவரும் சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடியுள்ளனர்.

93 ஆம் மாவட்ட காவல்துறையினர் (SDPJ 93) இச்சம்பவம் தொடர்பில் விசாணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வர்த்தக‌ விளம்பரங்கள்