தமிழகத்தை ஒரு குடும்பம் சூறையாடுகிறது: பழனிசாமி
17 ஐப்பசி 2023 செவ்வாய் 07:23 | பார்வைகள் : 2705
தி.மு.க. ஆட்சி தமிழகத்தின் உரிமைகளை காவு கொடுத்து மக்களின் வாழ்வை துயர் மிகுந்ததாக மாற்றி விட்டது' என அ.தி.மு.க. பொதுச் செயலர் பழனிசாமி கூறியுள்ளார்
அவரது அறிக்கை:
கடந்த 29 மாத தி.மு.க. ஆட்சி தமிழகத்தின் உரிமைகளை காவு கொடுத்து மக்களின் வாழ்வை துயர் மிகுந்ததாக மாற்றி விட்டது. மின் கட்டணம் வீட்டு வரி பால் கட்டுமான பொருட்கள் பத்திரப் பதிவு கட்டணங்கள் உயர்வு காரணமாக மக்களை துயரத்தில் ஆழ்த்தி இருக்கிறது.
கள்ளச் சாராயமும் கஞ்சா புழக்கமும் தமிழகத்தின் எதிர்காலத்தை கேள்விக்குறி ஆக்கி விட்டன. ஜனநாயகத்தை காக்க வேண்டிய சட்டசபை ஜனநாயகத்தின் புதைகுழியாக மாற்றப்படுகிறது.
ஒரு குடும்பம் தமிழகத்தை சூறையாடுகிறது. லோக்சபா தேர்தலை நாடு எதிர்நோக்கி இருக்கிறது.
மக்களை நம்பி கட்சி தேர்தலை சந்திக்க இருக்கிறது. தேர்தலில் புதுச்சேரி உள்ளிட்ட 40 லோக்சபா தொகுதிகளையும் அ.தி.மு.க. கைப்பற்றியது என்ற வெற்றி செய்தி தான் தமிழகத்தை தீயசக்திகளிடம்இருந்து மீட்கும் முழக்கமாக அமையும். அதை அனைவரும் மனதில் நிலைநிறுத்தி அயராது பணியாற்ற வேண்டும்.
அ.தி.மு.க. 52வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நாளில் ஆளுமை திறனற்ற ஆட்சியாளர்களின் ஊழல் ஆட்சிக்கு முடிவுரை எழுத சூளுரை ஏற்போம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது