Paristamil Navigation Paristamil advert login

பெல்ஜியத்தில் பயங்கரவாத தாக்குதல் - தொலைபேசியில் தொடர்புகொண்ட ஜனாதிபதி மக்ரோன்!

பெல்ஜியத்தில் பயங்கரவாத தாக்குதல் - தொலைபேசியில் தொடர்புகொண்ட ஜனாதிபதி மக்ரோன்!

17 ஐப்பசி 2023 செவ்வாய் 06:00 | பார்வைகள் : 4792


பெல்ஜியத்தின் தலைநகர் Brussels இல் பயங்கரவாத தாக்குதல் இடம்பெற்றதில் குறைந்தது இருவர் கொல்லப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தாக்குதலை அடுத்து, ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் பெல்ஜிய பிரதமரை தொடர்புகொண்டு உரையாடியுள்ளார்.

“தாக்குதலில் பாதிக்கப்பட்ட அனைத்து பெல்ஜியத்தினர் மற்றும் யூதர்களையும் நான் நினைத்துக்கொள்கிறேன்! என தனது X சமூகவலைத்தளத்தில் குறிப்பிட்டிருக்கும் மக்ரோன், பெல்ஜிய பிரதமரை தொடர்பு கொண்டு உரையாடியதாகவும் தெரிவித்தார்.

அதேவேளை, முன்னாள் ஜனாதிபதி பிரான்சுவா ஒலோந்து (François Hollande) தனது ஆதரவை பெல்ஜிய மக்களுக்குத் தெரிவித்துள்ளார்.

நேற்று திங்கட்கிழமை மாலை 7 மணி அளவில் Brussels நகரில் பயங்கரவாதி ஒருவன் மேற்கொண்ட கண்மூடித்தனமான துப்பாக்கிச்சூட்டில் இருவர் கொல்லப்பட்டதுடன், மேலும் மூவர் காயமடைந்துள்ளனர். ஆயுததாரி தப்பி ஓடியுள்ளார். அதிரடிப்படையினர் ஆயுததாரியை தேடி வருகின்றனர்.

துப்பாக்கிச்சூடை அடுத்து, அருகில் இடம்பெற்ற பெல்ஜியம்-ஸ்வீடன் அணிகளுக்கு இடையிலான உதைபந்தாட்ட போட்டி நிறுத்தப்பட்டு, பாதுகாப்பு காரணமாக பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்கள் மைதானத்துக்குள் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.

அதேவேளை, பெல்ஜிய-பிரான்ஸ் எல்லைப் பாதுகாப்பை அதிகரிக்கும் படி பிரான்சின் உள்துறை அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்