பரிஸ் : மோதலில் இளைஞனுக்கு கத்திக்குத்து!!
17 ஐப்பசி 2023 செவ்வாய் 06:49 | பார்வைகள் : 18680
பரிஸ் 10 ஆம் வட்டாரத்தில் இடம்பெற்ற மோதல் ஒன்றில் 19 வயதுடைய இளைஞன் ஒருவர் கத்திக்குத்து இலக்காகியுள்ளார்.
collège Louise Michel (10 ஆம் வட்டாரம்) கல்லூரிக்கு அருகே இச்சம்பவம் நேற்று திங்கட்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது. இரு நபர்கள் இணைந்து குறித்த இளைஞனை தலையில் தாக்கியுள்ளார். பின்னர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.
காவல்துறையினர் அழைக்கப்பட்டு தாக்குதலுக்கு இலக்கான இளைஞன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தலையில் படுகாயமடைந்த இளைஞன் சிகிச்சைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.


























Bons Plans
Annuaire
Scan