Saint-Ouen : சிறுவன் மீது துப்பாக்கிச்சூடு! - ஒருவர் கைது!

14 ஐப்பசி 2023 சனி 10:29 | பார்வைகள் : 11149
சிறுவன் ஒருவன் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய 18 வயதுடைய இளைஞன் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 93 ஆம் மாவட்டத்தில் உள்ள Saint-Ouen நகரில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கடந்த ஒக்டோபர் 8, ஞாயிற்றுக்கிழமை மாலை Saint-Ouen நகர்பகுதியில் இளைஞர்களுக்கு இடையே குழு மோதல் ஒன்று வெடித்திருந்தது. அதன்போது 16 வயதுடைய சிறுவன் ஒருவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டிருந்தது. படுகாயமடைந்த சிறுவன், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார்.
இந்நிலையில், இந்த மோதல் தொடர்பாகவும், துப்பாக்கிச்சூடு தொடர்பாகவும் விசாரணைகளை மேற்கொண்டு வந்த காவல்துறையினர், நேற்று வெள்ளிக்கிழமை 18 வயதுடைய ஒருவரைக் கைது செய்தனர்.
குறித்த நபர் வரும் நவம்பர் 9 ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளார்.
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025