Paristamil Navigation Paristamil advert login

அஜித் படத்தை இயக்குவாரா லோகேஷ் ?

அஜித் படத்தை இயக்குவாரா லோகேஷ் ?

14 ஐப்பசி 2023 சனி 13:38 | பார்வைகள் : 2666


’மாநகரம்’ ’கைதி’ ’மாஸ்டர்’ ’விக்ரம்’ ஆகிய நான்கு திரைப்படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கிய 5வது படமான ‘லியோ’ வரும் 19ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த படம் தமிழ் சினிமாவின் வசூல் சாதனையை புரட்டி போடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணியில் உள்ள லோகேஷ் கனகராஜ் அவர்களிடம் ஏற்கனவே ’உங்களது படத்தில் விஜய், சூர்யா, கார்த்தி, சஞ்சய் தத், அர்ஜுன் என பல முன்னணி நடிகர்கள் நடித்து விட்டார்கள், உங்களது பக்கெட் லிஸ்ட்டில், LCUவில் வேறு யாரெல்லாம் இணைந்து நடிக்க வாய்ப்பு இருக்கிறது என்று கேள்வி கேட்கப்பட்டது.

இந்த கேள்விக்கு ’எல்லோருடனும் இணைந்து பணிபுரிய வேண்டும் என்று தான் எனக்கு ஆசை, சின்ன வயதில் இருந்து அவர்களை எல்லாம் பார்த்து பார்த்து தான் வளர்ந்து இருக்கிறேன். தற்போது ரஜினியின் அடுத்த படத்தை இயக்க இருப்பது எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது, அதேபோல் அஜித் அவர்களின் படத்தை இயக்க வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக இயக்குவேன்’ என்று கூறினார்.இதனை அடுத்து லோகேஷ் இயக்கத்தில் அஜித் நடிப்பில் ஒரு படம் உருவாகுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்