Paristamil Navigation Paristamil advert login

எடை குறைப்பதற்கு தினசரி எவ்வளவு தூரம், எவ்வளவு நேரம் நடக்க வேண்டும்..?

எடை குறைப்பதற்கு தினசரி எவ்வளவு தூரம், எவ்வளவு நேரம் நடக்க வேண்டும்..?

14 ஐப்பசி 2023 சனி 14:12 | பார்வைகள் : 2395


உடலுக்கு எந்தவிதமான பாதிப்பையும் ஏற்படுத்தாமல் பாதுகாப்பான மற்றும் நீண்ட நாட்களுக்கு பலன் தரக்கூடிய எடை குறைக்கும் முறைகளில் ஒன்றுதான் வாக்கிங் செல்வது. தினமும் சிறிது நேரம் நடைபயிற்சி சென்றாலே உடல் எடை அதிகரிக்காமல் பார்த்துக்கொள்ளலாம்.

அதிக உடல் எடை இருப்பவர்கள் மிகவும் தீவிரமான உடற்பயிற்சி செய்யும் பொழுது கால் வலி, தசைப்பிடிப்பு, மூட்டுகளில் அழுத்தம் உள்ளிட்டவை ஏற்படலாம். எனவே மூட்டுகளுக்கு அதிக அழுத்தம் கொடுக்காமல், பாதிப்பு ஏற்படாமல், அதே நேரத்தில் எடையை குறைப்பதற்கு நடைபயிற்சி மிகவும் பயனுள்ளதாகவும், சௌகரியமாகவும் இருக்கும். ஆனால், எடை குறைய வேண்டுமானால் தினசரி எவ்வளவு நேரம், எவ்வளவு தூரம் நடக்கலாம் என்பது பற்றிய சரியான புரிதல் இருக்க வேண்டும்.

நீங்கள் இதுவரை எந்த உடற்பயிற்சியும் செய்ததில்லை இப்போது தான் நடைப்பயிற்சி செய்ய தொடங்குகிறீர்கள் என்றால், சிறிது நாட்கள் வரை தினமும் 30 நிமிடம் நடந்தால் போதுமானதாக இருக்கும். சுமாராக 70 கிலோ எடையுள்ள ஒரு நபருக்கு இது தோராயமாக 150 கலோரிகளை எரிக்கும்.

நீங்கள் அதிக கலோரிகளை எரிக்க வேண்டும் என்றால் குறைந்தப்பட்சம் தினசரி 45 நிமிடம் நடக்கலாம். இதன் மூலம் நாளொன்றுக்கு 225 கலோரிகளை நீங்கள் எரிக்க முடியும்.

பொதுவாகவே உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கும் உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்வதற்கும் எடை அதிகரிக்காமல் பார்த்துக் கொள்வதற்கும் தினசரி 45 - 60 நிமிடங்கள் வரை ஏதேனும் ஒரு உடற்பயிற்சி அல்லது உடல் ரீதியான செயல்பாடுகளில் ஈடுபட வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுவார்கள். எனவே நீங்கள் அதிக எடை இருந்தால், தினசரி குறைந்தப்பட்சம் 60 நிமிடங்கள் நடந்தால் தோராயமாக 300 கலோரிகள் எரிக்கலாம்.

நீங்கள் ஏற்கனவே சுறுசுறுப்பாக இருக்கிறீர்கள்; அது மட்டுமில்லாமல் உங்களுக்கு எடை மிகவும் விரைவாக குறைய வேண்டும் என்று விருப்பப்பட்டால், குறைந்தப்பட்சம் 75 நிமிடங்கள் நடைபயிற்சி மேற்கொள்ளலாம். இதன் மூலம் ஒரு நாளுக்கு 375 கலோரிகள் எரிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்களுக்கு நடைபயிற்சி ஓரளவு பழகி விட்டது அல்லது நீங்கள் ஏற்கனவே சுறுசுறுப்பாகத்தான் இருக்கிறீர்கள் என்றும் பட்சத்தில் நீங்கள் அதிக கலோரிகளை எரித்து அதிக உடல் எடையை ஆரோக்கியமான முறையில் குறைக்க விரும்பினால், தினசரி குறைந்தது 90 நிமிடங்கள் நடக்கலாம். இதன்மூலம் தோராயமாக 450 கலோரிகள் எரிக்கப்படும்.

போது கலோரிகள் அதிகமாக எரிக்கப்படும். நீங்கள் எந்த அளவுக்கு கலோரிகளை எரிக்கிரீர்களோ அந்த அளவுக்கு விரைவாக எடை குறையும்.
நடைபயிற்சி செய்யத் தொடங்குபவர்கள், முதலில் 30 நிமிடங்களில் இருந்து தொடங்கி கொஞ்சம் கொஞ்சமாக 1 முதல் 1:30 மணி நேரம் வரை நீடிக்கலாம். நடக்கும் பொழுது மிகவும் நிதானமாக இல்லாமல், கொஞ்சம் வேகமாக நடை போடும்போது கலோரிகள் அதிகமாக

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்