Paristamil Navigation Paristamil advert login

மீண்டும் கல்லூரி மாணவனாக மாறும் சூர்யா?

மீண்டும் கல்லூரி மாணவனாக மாறும் சூர்யா?

14 ஐப்பசி 2023 சனி 14:23 | பார்வைகள் : 6265


தமிழ் திரையுலகில் மிகச் சிறந்த இயக்குனராக விளங்கி வரும் ஒருவர்தான் சுதா கொங்காரா. மாதவன் நடிப்பில் வெளியான இறுதிச்சுற்று மற்றும் சூர்யா நடிப்பில் வெளியான சூரரை போற்று ஆகிய இரு திரைப்படங்களும் சுதா கொங்காராவின் மாஸ்டர் பீஸ் என்றே கூறலாம்.

அந்த வகையில் மீண்டும் ஒருமுறை பிரபல நடிகர் சூர்யாவுடன் சுதா கொங்கரா இணைய உள்ளார் சூர்யாவின் 43 வது திரைப்படமாக இது உருவாக உள்ளது. தற்பொழுது சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் கங்குவா திரைப்பட பணிகள் முடிந்த பிறகு இப்பட பணிகளை உடனடியாக துவங்க உள்ளார் நடிகர் சூர்யா.

இந்நிலையில் இந்த திரைப்படத்தில் சூர்யா மீண்டும் ஒரு கல்லூரி மாணவன் கதாபாத்திரத்தை ஏற்று நடிக்க உள்ளதாகவும். அதற்காக பெரிய அளவில் உடல் எடையை குறைக்க உள்ளதாகவும் சில தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் இந்த திரைப்படத்தில் பிரபல மலையாள நடிகர் துல்கர் சல்மான் மற்றும் நஸ்ரியா ஆகிய இருவரும் நடிக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

வர்த்தக‌ விளம்பரங்கள்