Paristamil Navigation Paristamil advert login

சர்வதேச போர் விதிகளை கடைப்பிடிக்குமாறு இஸ்ரேலுக்கு ஜனாதிபதி மக்ரோன் கோரிக்கை!

சர்வதேச போர் விதிகளை கடைப்பிடிக்குமாறு இஸ்ரேலுக்கு ஜனாதிபதி மக்ரோன் கோரிக்கை!

14 ஐப்பசி 2023 சனி 16:19 | பார்வைகள் : 8784


போரில் சர்வதேச விதிமுறைகளை கடைப்பிடிக்குமாறு இஸ்ரேலுக்கு ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் கோரியுள்ளார்.

காசா நிலப்பரப்பு மீது தொடர் தாக்குதல் மேற்கொண்டு வரும் இஸ்ரேல், அங்கு சிக்குண்டுள்ள மக்கள் வெளியேற போதிய கால அவகாசம் வழங்கவில்லை என சர்வதேசம் குற்றம் சாட்டியுள்ளது. இந்நிலையில், இன்று ஞாயிற்றுக்கிழமை ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதான்யகுவிடம் தொலைபேசி வழியாக உரையாடினார்.

அதன்போது யுத்தத்தில் சிக்குண்டுள்ள பொதுமக்கள் பாதுகாப்பா வெளியேற வைக்க வேண்டிய கடமை இஸ்ரேலுக்கு உள்ளதாக அறிவுறுத்தினார். போர்க்குற்றங்களில் இருந்து விலகி செயற்படுமாறும் ஜனாதிபதி அவரிடன் கோரியுள்ளதாக அறிய முடிகிறது.

யுத்தம் ஆரம்பித்து ஒருவார காலம் ஆன நிலையில், மூன்றாவது முறையாக இருவரும் தொலைபேசி வழியாக உரையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

 

வர்த்தக‌ விளம்பரங்கள்