இஸ்ரேலுக்கு இலவச தொலைபேசி அழைப்புகள்! - ஒரு வாரத்தின் பின்னர் அறிவித்த Orange!

14 ஐப்பசி 2023 சனி 17:31 | பார்வைகள் : 11079
இஸ்ரேலுக்கும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே மோதல் ஆரம்பித்து ஒரு வாரம் ஆன நிலையில், இஸ்ரேலுக்கு இலவசமாக தொலைபேசி அழைப்புக்களை மேற்கொள்ள முடியும் என Orange தொலைத்தொடர்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
இஸ்ரேலில் இருக்கும் உறவுகளுடன் தொலைபேசியூடாக உரையாக இந்த இலவச சேவையினை Orange நாளை திங்கட்கிழமை முதல் வழங்குகிறது. முன்னதாக கடந்த திங்கட்கிழமை முதல் SFR தொலைத்தொடர்பு நிறுவனம் இஸ்ரேலுக்கான இலவச அழைப்புகளை வழங்கி வருகிறது.
ஹமாஸ் அமைப்பினர் மேற்கொண்டு வரும் தாக்குதலில் இதுவரை 15 பிரெஞ்சு மக்கள் இஸ்ரேலில் கொல்லப்பட்டுள்ளனர். 17 பேர் குறித்த தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை. இந்நிலையிலேயே இந்த இலவச தொலைபேசி அழைப்புக்கள் மிகுந்த பயனுள்ளதாக அமைந்துள்ளதாக பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.