Paristamil Navigation Paristamil advert login

பிரான்ஸ் நாட்டவரை விடவும் வதிவிட உரிமை அற்றவருக்கே மருத்துவ உதவி அதிகம்.

பிரான்ஸ் நாட்டவரை விடவும் வதிவிட உரிமை அற்றவருக்கே மருத்துவ உதவி அதிகம்.

15 ஐப்பசி 2023 ஞாயிறு 06:56 | பார்வைகள் : 4458


பிரான்சில் நிரந்தர வதிவிட உரிமை அற்றவர்கள் சட்டப்படி வேலைகள் செய்ய முடியாது. ஆனாலும் அவர்களுக்கு (Aide Médicale d'État) அரச மருத்துவ உதவி AME வழங்கப்படுகிறது.

இந்த உதவி பெறும் பயனாளிகள் அண்மைக் காலத்தில் நாடுமுழுவதும் அதிகரித்து உள்ளது. 30 septembre 2022ல் AME பயனாளிகளின் எண்ணிக்கை 403 144 ஆக இருந்தது, அதுவே 31 march 2023ல் 422 686 ஆக உயர்ந்துள்ளது. ஏறத்தாழ ஆறு மாதத்தில் 20 000 பயனாளிகள் அதிகரித்து உள்ளனர். நிரந்தர வதிவிட அனுமதிப் பத்திரம் அற்றவர்களின் மருத்துவ உதவிக்கு அரசு ஆண்டு ஒன்றுக்கு சுமார் 1.7 பில்லியன் யூரோக்களை செலவு செய்கிறது.

கடந்த வெள்ளிக்கிழமை Arras நகரில், 20 வயது Mohammed M எனும் பயங்கரவாதி,  குடும்பத்தோடு வதிவிட அனுமதி நீண்ட காலத்திற்கு முன்னர் நிராகரிக்கப்பட்டும் நாடு கடத்தப்படாமல் இருந்துவந்த நிலையிலேயே , பேராசிரியர் Dominique Bernard என்பவரை படுகொலை செய்திருந்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்