விடாமுயற்சி பட ஷூட்டிங் ஸ்பாட்டில் உயிரிழந்த கலை இயக்குனர் மிலன்

15 ஐப்பசி 2023 ஞாயிறு 08:27 | பார்வைகள் : 5668
அஜித்குமார் நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கி வரும் படம் ‛விடாமுயற்சி'. இதன் படப்பிடிப்பு அஜர்பைஜானில் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று (அக்.,15) காலை முதல் படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில், கலை இயக்குனர் மிளன், திடீரென மாரடைப்பால் உயிரிழந்தார். அஜித்தின் பேவரைட் கலை இயக்குனர் என கருதப்படும் மிளன் உயிரிழந்த தகவலால், படக்குழு சோகத்தில் ஆழ்ந்துள்ளது.