யூரோவுக்கு எதிராக அதிகரித்த இலங்கை ரூபாவின் பெறுமதி
15 ஐப்பசி 2023 ஞாயிறு 08:49 | பார்வைகள் : 4692
2023ஆம் ஆண்டில் இன்றைய திகதி வரையில் யூரோவுக்கு நிகராக 13.4 சதவீதத்தினால் இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரித்துள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள வாராந்த அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 12.1 சதவீதத்தால் அதிகரித்துள்ளது..
ஸ்ரேலிங் பவுண்டுக்கு நிகரான பெறுமதி 10.7 சதவீதத்தினாலும் ரூபாவின் பெறுமதி அதிகரித்துள்ளது.
அதேவேளை ஏனைய வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராகவும் இலங்கை ரூபாவின் பெறுமதி கணிசமான அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.