கண்காணிப்பின் பலவீனமா அராஸ் பயங்கரவாதத் தாக்குதல்!!
15 ஐப்பசி 2023 ஞாயிறு 10:00 | பார்வைகள் : 4425
அராசின் கொலையாளியான இஸ்லாமியப் பயங்கரவாதி, தாக்குதல் நடாத்தும் அபாயம் தெரிந்திருந்தும், காவற்துறையின் கண்காணிப்பின் பலவீனமா இந்தத் தாக்குதல் என, ஒரு செவ்வியில் பிரதமர் எலிசபெத் போர்னிடம் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
இவர் மீது தொடர்ச்சியான கண்காணிப்புகள் இருந்ததாக ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது.
«காவற்துறையினரின் விசாரணை உண்மைகளை வெளிச்சத்திற்குக் கொண்டு வரும்»
« இருந்த தகவல்களிலும், கண்காணிப்பின் தரவுகளிலும், இவன் பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபடுவான் என எமால் கணிக்க முடியவில்லை»
«தொடர்ச்சியான நெருங்கிய கண்காணிப்பிலும், அவனது நடவடிக்கைகளின் அபாயத்தின் அறிகுறிகள் இருந்தும், அவனது பயங்கரவாத நடவடிக்கையை எம்மால் கணிக்க முடியவில்லை»
என பிரதமர் ஒப்புதல் வாக்குமூலம் தெரிவித்துள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்னமும் இவர்களின் கண்காணிப்பு பலவீனத்தால் எத்தனை ஆபத்து ஏற்படும் என்ற அச்சம் பெருகி உள்ளது.