பயங்கரவாதிக்கு தந்தை தூண்டுதல்!! தேடுதல் ஆரம்பம்!!

15 ஐப்பசி 2023 ஞாயிறு 10:28 | பார்வைகள் : 7600
அராஸ் நகரின் இஸ்லாமியப் பயங்கரவாதத் தாக்குதலை மேற்கொண்ட பயங்கரவாதி மொஹமத் தொடர்ச்சியான காவற்துறை விசாரணகளை மேற்கொண்டு வருகின்றனர்.
விசாரணைகளிற்குப் பயங்கரவாதி ஒத்துழைக்காவிட்டாலும் இவன் தொடர்பான பல தகவல்களை விசாரணையாளர்கள் திரட்டி உள்ளனர்.
இஸ்லாத்தின் பேரில் பிரான்சின் மீது இவன் தாக்குதல் நடாத்துவதற்குத் தூண்டுதலாக இவனது தந்தை இருந்துள்ளார் என்ற தகவலைக் காவற்துறையினர் திரட்டி உள்ளனர்.
இதன் தொடர்ச்சியான இன்றைய விசாரைணகளில், பயங்கரவதியின் தந்தை ஜோர்ஜியா நாட்டிற்கு த் தப்பித்துச் சென்றுள்ள நிலையில், அங்கு அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இவர் கைது செய்யப்பட்டு பிரான்சிடம் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.