பிரித்தானியாவில் அமுல்படுத்தப்படும் புதிய சட்டம்
18 ஐப்பசி 2023 புதன் 08:56 | பார்வைகள் : 4958
பிரித்தானியா சிறைச்சாலைகளில் காணப்படும் குற்றவாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக புள்ளி விபரம் வெளியாகியுள்ளது.
அங்கு சுமார் 88,225 பேர் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரியவந்துள்ளது.
இந் நிலையில் , அவர்களுக்காக, மக்களுடைய வரிப்பணம் ஆண்டொன்றிற்கு 47,000 பவுண்டுகள் செலவிடப்பட்டுவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் , சிறைகள் நிரம்பி வழிவதைத் தடுப்பதற்காக, நீதித்துறைச் செயலரான அலெக்ஸ் சால்க் (Alex Chalk) சில புதிய திட்டங்களை முன்வைத்துள்ளார்.
அதன்படி, 12 மாதங்களுக்குக் குறைவான சிறைத்தண்டனை பெற்றவர்கள் இனி சிறையில் அடைக்கப்படமாட்டார்கள்.
அவர்கள், காலில் மின்னணுப்பட்டை அணிவிக்கப்பட்டு, பொது இடங்களை தூய்மைப்படுத்தும் பணிகளில் ஈடுபடுத்தப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை வன்புணர்வு மற்றும் பயங்கர பாலியல் குற்றங்களில் ஈடுபட்ட குற்றவாளிகள், இவ்வாறு தெருக்களில் நடமாட அனுமதிக்கப்படமாட்டார்கள் எனவும், அவர்கள் தங்கள் முழு தண்டனைக் காலத்தையும் சிறையில்தான் செலவிடவேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.