அமேசான் கிளை நதிகளில் உயிரிழந்த நூற்றுக்கணக்கான டால்பின்கள்

18 ஐப்பசி 2023 புதன் 09:09 | பார்வைகள் : 9748
பிரேசிலில் ஏற்பட்டுள்ள வரலாற்று காணாத வறட்சியை தொடர்ந்து, அதன் வழியாக ஓடும் அமேசான் நதியின் கிளை நதிகள் வறண்டுள்ளன.
இதனால் நதிகள் வழியாக தொலை தூர கிராமங்களுக்கு இடையே இயக்கப்பட்டு வந்த படகு போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ளது.
அத்துடன் போக்குவரத்து பாதிக்கப்பட்டு இருப்பதால் அங்குள்ள மக்கள் உணவு, குடிநீர் ஆகிய அத்தியாவசிய பொருட்களின் தட்டுப்பாட்டில் சிக்கி சிரமங்களுக்கு உள்ளாகி வருகின்றனர்.
இந்நிலையில் நதிகள் வறண்டு விட்டதால் அதில் வாழ்ந்து வந்த நூற்றுக்கணக்கான டால்பின்கள் இறந்து விட்டதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான ட்ரோன்கள் காட்சிகளும் சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
4 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025