பாலஸ்தீன மக்களை ஏற்றுக் கொள்ள மறுக்கும் பிரபல நாடு
18 ஐப்பசி 2023 புதன் 09:21 | பார்வைகள் : 4370
இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தின் ஹமாஸ் படையினருக்கும் இடையே தீவிரமான சண்டை நடைபெற்று வருகின்றது.
காசா பகுதியில் உள்ள பாலஸ்தீன மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு நகர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் காசா பகுதியில் இருந்து வரும் புலம்பெயர்ந்தவர்களை ஜோர்டான் ஏற்றுக் கொள்ள முடியாது என ஜோர்டான் மறுப்பு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக பெர்லினில் செய்தியாளர்கள் மாநாட்டில் பேசிய ஜோர்டான் மன்னர் இரண்டாம் அப்துல்லா, இது ஒரு சிவப்பு கோடு.
அங்கு ஏற்பட்டுள்ள பிரச்சனையை காசா பகுதியிலும் அல்லது மேற்குக் கரையில் உள்ள பாலஸ்தீனப் பகுதிகளிலும் தீர்க்கப்பட வேண்டும்.
அதை மற்ற நாடுகளுக்கு மாற்றக் கூடாது எனத் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் பாலஸ்தீனத்தின் காசா மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்க எகிப்து தயாராக உள்ளது.
ஆனால் பாலஸ்தீனத்தில் இருந்து புலம்பெயர்ந்து வரும் மக்களை ஏற்றுக் கொள்ள காசா தயாராக இல்லை என பைனான்சியல் டைம்ஸ் எழுதியுள்ளது.
எகிப்து அதிகாரிகள் ஐரோப்பிய பிரதிநிதிகளிடம் பேசிய உரையாடல் குறித்த தகவல்களில் பைனான்சியல் டைம்ஸ் வழங்கிய தகவலில்,
"நாங்கள் 1 மில்லியன் மக்களை எடுத்துக் கொள்ள விரும்புகிறோமா....? அப்படி என்றால் அவர்களை நான் ஐரோப்பாவிற்கு அனுப்பப் போகிறேன்.
மனித உரிமைகள் குறித்து மிகவும் அக்கறை கொண்டுள்ள நீங்கள் அவர்களை எடுத்துக் கொள்ளுங்கள்" என எகிப்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள் என்பது குறிப்பிட்டுள்ளது.