இலங்கை வீரர் தனுஷ்க குணதிலகா மீதான தடையை நீக்கிய இலங்கை நிர்வாகம்!
18 ஐப்பசி 2023 புதன் 09:27 | பார்வைகள் : 2255
பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், இலங்கை வீரர் தனுஷ்கா குணதிலகா மீதான தடையை கிரிக்கெட் நிர்வாகம் நீக்கியுள்ளது.
இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்கா குணாதிலகா அவுஸ்திரேலியாவில் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டினால் கைது செய்யப்பட்டு, விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.
இவ்விவகாரம் இலங்கை கிரிக்கெட் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து குணதிலகா இலங்கை கிரிக்கெட் வாரியத்தினால் இடைநீக்கம் செய்யப்பட்டார்.
அதன் பின்னர் சிட்னி நீதிமன்றத்தில் 4 நாட்கள் விசாரணையை அவர் எதிர்கொண்டார். அதனைத் தொடர்ந்து அவர் சமீபத்தில் குற்றமற்றவர் என நிரூபிக்கட்டதால் விடுவிக்கப்பட்டார்.
இதனால் அவர் தாயகம் (இலங்கை) திரும்ப தகுதி பெற்றார். அதன் பின்னர் அவர் கடந்த 3ஆம் திகதி இலங்கை வந்தடைந்தார்.
குணதிலகா /Gunathilaka Peter Cziborra/Reuters
இந்த நிலையில் இலங்கை கிரிக்கெட் வாரியம் குணாதிலகா மீதான தடையை நீக்கியுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிக்கையும் வெளியிடப்பட்டுள்ளது.
அத்துடன் அவர் விரைவில் விளையாட்டிற்கு திரும்புவார் என நம்புவதாகவும் வாரியம் கூறியுள்ளது.