Paristamil Navigation Paristamil advert login

தென்கிழக்கை அடித்துச் செல்லும் வெள்ளம்! - நான்கு மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!

தென்கிழக்கை அடித்துச் செல்லும் வெள்ளம்! - நான்கு மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!

18 ஐப்பசி 2023 புதன் 12:30 | பார்வைகள் : 6873


பிரான்சின் தென்கிழக்கு பிராந்தியங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. அங்கு நான்கு மாவடங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

Drôme, Hérault, Gard மற்றும் Ardèche ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அங்கு அதிகபட்சமாக 250 மில்லி மீற்றர் மழை வீச்சி பதிவாகும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 

வெள்ளத்தோடு புயல் காற்றும் வீசும் எனவும், மக்கள் அவதானத்துடன் இருக்கும்படியும் கோரப்பட்டுள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்