Paristamil Navigation Paristamil advert login

பிரசவத்திற்கு பின் ஏற்படும் தொப்பையை குறைப்பது எப்படி?

பிரசவத்திற்கு பின் ஏற்படும் தொப்பையை குறைப்பது எப்படி?

18 ஐப்பசி 2023 புதன் 15:03 | பார்வைகள் : 2058


பொதுவாக பெண்களுக்கு பிரசவம் ஆன பின்னர் ஹார்மோன் மாற்றம் காரணமாக உடல் பருமன் ஏற்படுவது சகஜம். குறிப்பாக வயிறு பெரிதாகி தொப்பையுடன் காணப்படும். இதனை தவிர்ப்பது எப்படி என்பதை பார்க்கலாம். 

பிரசவத்தின்போது வயிறு பலூன் போல் இருக்கும்  என்பதும் குழந்தை வளரும்போது பெண்களின் வயிறும் மெதுவாக விரிவடையும். அதன் பிறகு குழந்தை வெளியே வரும்போது அந்த பலூன் சட்டென சுருங்காது அதில் உள்ள காற்று மெதுவாக தான் வெளியேறும். 
 
பிரசவத்திற்கு பின்னர் பழைய நிலைக்கு வயிறு திரும்ப வேண்டும் என்றால் முதலில் சில பழக்கவழக்கங்களை மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக பிரசவத்தின் போதே உடலில் எளிமையான உடற்பயிற்சிகளை செய்து பழக வேண்டும். 
 
உடலில் இருக்கும் நச்சை வெளியேற்ற  புரதச்சத்து மிகுந்த உணவுகளை சாப்பிட வேண்டும். எளிமையான உடற்பயிற்சி, மூச்சு பயிற்சி ஆகியவற்றை செய்தால் நாளடைவில் வயிற்றில் உள்ள சுருக்கங்கள் மறைந்து தொப்பையும் மறைந்துவிடும்.  
 
நம் முன்னோர்கள் தொப்பையை குறைப்பதற்காக வயிற்றில் துணி கட்டும் முறை இருந்தது. தற்போது பாடி ராப்களை கட்டிக் கொள்கின்றனர். தொப்பை குறைய இதுவும் ஒரு வழியாகும்.
 
அதேபோல் மசாஜ் செய்வதும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மசாஜ் தொடர்ச்சியாக செய்வதால் வயிற்றில் உள்ள கொழுப்பு குறைத்து தொப்பை மறையும்,

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்