Paristamil Navigation Paristamil advert login

எத்தனை குண்டு போட்டாலும் இந்த ஜப்பானை அழிக்க முடியாதுடா': 'ஜப்பான்' டீசர்..

எத்தனை குண்டு போட்டாலும் இந்த ஜப்பானை அழிக்க முடியாதுடா': 'ஜப்பான்' டீசர்..

18 ஐப்பசி 2023 புதன் 15:11 | பார்வைகள் : 1978


கார்த்தி நடித்த ‘ஜப்பான்’ திரைப்படம் வரும் தீபாவளி அன்று வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டீசர் சற்று முன் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் வெளியாகியுள்ள இந்த டீசர் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.

முதல் காட்சியிலேயே ஒரு வங்கியில் பெரிய ஓட்டை போட்டு 200 கோடி ரூபாய் கொள்ளை அடித்த ஜப்பானை பிடிக்க காவல்துறையினர் எடுக்கும் நடவடிக்கை தான் இந்த படத்தின் கதை என்பது டீசரில் இருந்து தெரிய வருகிறது.

ஜப்பானை 4 மாநில போலீசார் தேடி வருவதாகவும் கொள்ளையடித்தவுடன் ஜப்பான் ஏதாவது ஒரு தீவில் சென்று ஆடம்பர வாழ்க்கை வாழ்வதாகவும் காவல்துறையினர் கூறுகின்றனர். இந்த நிலையில் திடீரென போலீசார் ஜப்பானை சுற்றி வளைக்க போலீசாரிடம் இருந்து ஜப்பான் தப்பித்தாரா அல்லது மாட்டினாரா என்பது தான் இந்த படத்தின் கதை.

கார்த்திக் ஜோடியாக அனு இம்மானுவேல் நடித்திருக்கும் இந்த படத்தில் சுனில், விஜய் மில்டன் உள்பட பலர் நடித்துள்ளனர். ராஜு முருகன் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் இசையில், ரவிவர்மன் ஒளிப்பதிவில், பிலோமின் ராஜ் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது. இந்த படம் நிச்சயம் தீபாவளி விருந்தாக கார்த்தி ரசிகர்களுக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களுக்கும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.