Paristamil Navigation Paristamil advert login

மட்டன் 65

மட்டன் 65

18 ஐப்பசி 2023 புதன் 15:27 | பார்வைகள் : 2690


ரொம்பவே சுவையான மட்டன் 65 , சிக்கன் 65  சுவையையும் மிஞ்சிவிடும்அளவிற்கு இருக்கம். ஆட்டுக்கறியை பொறுத்தவரை, நம்முடைய உடலுக்கு பலம் தரக்கூடியது..உடல் சூட்டை தணிக்கக்கூடியது.. தோலுக்கு பலம் தருவதுடன், சருமத்துக்கான பளபளப்பையும்தரக்கூடியது. மட்டன் சாப்பிடுவதால், நம்முடைய பார்வை கோளாறுகள் நீங்குவதுடன், கூர்மையானபார்வைகளுக்கு உதவுகிறது என்றே சொல்லலாம். அசைவ பிரியர்கள் அதிகம் விரும்பி உண்ணும்இந்த மட்டனில், 65 செய்வதற்கு ரொம்பவே சுலபமானது. . சிக்கன்  போன்றே இந்த மட்டன்  65 ருசியாக இருக்கும். இதனை வீட்டில் எப்படி செய்யலாம்என இந்த பதிவில் பார்ப்போம் வாருங்கள்.

தேவையான பொருட்கள் 

200 கிராம்  எலும்பில்லாத மட்டன்
3 டேபிள்ஸ்பூன் கடலை மாவு 
2 டேபிள்ஸ்பூன் சோள மாவு 
2 டீஸ்பூன் இஞ்சி – பூண்டு விழுது 
3 டீஸ்பூன் மிளகாய்த்தூள் 
1 டீஸ்பூன் சீரகத்தூள் 
1/2 டீஸ்பூன் சோம்புத்தூள் 
1/4 டீஸ்பூன் மஞ்சள்தூள் 
1 டீஸ்பூன் எலுமிச்சைச் சாறு 
உப்பு தேவையான அளவு 
எண்ணெய் பொரிக்கத் தேவையான அளவு 

செய்முறை 

 மட்டன் துண்டுகளை நன்றாகக் கழுவி, குக்கரில் போட்டு உப்பு சேர்த்து 30 நிமிடங்கள் வேகவைத்து இறக்கி,தண்ணீரை வடித்து ஆறவிடவும் (அந்தத் தண்ணீரில் மட்டன் சூப் செய்யலாம் அல்லது குஸ்கா,குழம்பு செய்யும்போது பயன்படுத்திக்கொள்ளலாம்), 

ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, சோள மாவு, இஞ்சி பூண்டு விழுது, மிளகாய்த்தூள், சீரகத்தூள், சோம்புத்தூள்,மஞ்சள்தூள், எலுமிச்சைச் சாறு, உப்பு அனைத்தையும் சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டுகெட்டியான பேஸ்ட் பதத்தில் செய்து கொள்ளவும். (தண்ணீர் குறைவாகவே சேர்க்கவும்). 

 ஆறிய மட்டன் துண்டுகளை மசாலா கலவையில் நன்றாக கலந்து 1 மணிநேரம் குளிர்சாதன பெட்டியில் வைக்கவும், ▢   அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் சேர்த்து நன்கு சூடானதும், மட்டன் துண்டுகளை போட்டு பொரித்துஎடுக்கவும், 

   மேல் மாவு வெந்து மொறுமொறுப்பாரும் வரை பொரித்தால் போதும், மட்டன் 65 ரெடி

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்