கத்திக்குத்து தாக்குதலில் 13 வயதுச் சிறுவன் படுகாயம்!

18 ஐப்பசி 2023 புதன் 16:44 | பார்வைகள் : 10280
13 வயதுச் சிறுவன் மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்திய மற்றொரு சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று செவ்வாய்க்கிழமை நண்பகலின் பின்னர் இத்தாக்குதல் சம்பவம் Montataire (Oise) நகரில் உள்ள collège Anatole-France இல் இடம்பெற்றுள்ளது. 14 வயதுடைய மாணவன் ஒருவன், சிறிய கத்தி ஒன்றின் மூலம் 13 வயதுடைய சிறுவன் ஒருவரை தாக்கியுள்ளார். தாக்குதலுக்கு இலக்கான சிறுவன் படுகாயமடைந்து Creil நகரில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
அதேவேளை, தாக்குதல் நடத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தாக்குதலுக்குரிய காரணம் குறித்து தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. உளநல சிகிச்சை மையம் ஒன்று குறித்த கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டு மாணவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
4 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1