பரிசில் தோன்றிய அதிசயம்! - இணையத்தைக் கலக்கும் புகைப்படம்!!

18 ஐப்பசி 2023 புதன் 17:29 | பார்வைகள் : 10089
பரிசில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
வானில் குவிந்திருக்கும் மேக கூட்டங்களுக்கு நடுவே பாரிய இடைவெளி ஒன்று தென்பட்டுள்ளது. skypunch என அழைக்கப்படும் இதுபோன்ற நிகழ்வுகள் அரிதாக இடம்பெறும் ஒன்றாகும். நேற்று ஒக்டோபர் 17 ஆம் திகதி ஈஃபிள் கோபுரத்துக்கு அருகே எடுக்கப்பட்ட இந்த புகைப்படத்தில், மேற்படி skypunch காட்சியைக் காணலாம்.
புகைப்படக்கலைஞர் Bertrand Kulik இனால் எடுக்கப்பட்ட இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.
முன்னதாக கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் Guyana தீவில் இதேபோன்ற நிகழ்வு இடம்பெற்றிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.