Paristamil Navigation Paristamil advert login

காசா வைத்தியசாலை மீதான தாக்குதல் – சுமந்திரன் கண்டனம்

காசா வைத்தியசாலை மீதான தாக்குதல்  – சுமந்திரன் கண்டனம்

19 ஐப்பசி 2023 வியாழன் 02:54 | பார்வைகள் : 3833


காசா நகரில் உள்ள அல் – அக்லி  வைத்தியசாலை மீது இஸ்ரேல் போர் விமானங்கள் குண்டுகளை வீசிய நடத்திய தாக்குதலில் குழந்தைகள் உட்பட 500 பேர் பலியாகியுள்ளனர். இந்தத் தாக்குதல் சம்பவத்தை உலக நாடுகள் கண்டித்து வருகின்றன. இந்நிலையில், காசா வைத்தியசாலை மீதான தாக்குதலை வெறுக்கத்தக்க போர்க்குற்றம் என்று தனது ருவிட்டரில் பதிவிட்டுள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன்.

2009ஆம் ஆண்டில் புதுக்குடியிருப்பு வைத்தியசாலை மீதும் இலங்கை இராணுவத்தினர் இதே போன்றே தாக்குதல் நடத்திவிட்டு நொண்டிச்சாட்டையே தெரிவித்தது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“இது மிகவும் வெறுக்கத்தக்க போர்க்குற்றம். தூண்டுதல்கள் இருந்தால் கூட வைத்தியசாலைகள் மீது தாக்குதல்களை மேற்கொள்ள முடியாது” – என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பொதுமக்கள் மீதான தாக்குதல்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்றும் சுமந்திரன் எம்.பி. வலியுறுத்தியுள்ளார்.
 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்