காசாவுக்கு மனிதாபிமான உதவி வழங்க முன்வரும் அமெரிக்க அதிபர்
19 ஐப்பசி 2023 வியாழன் 07:41 | பார்வைகள் : 3087
இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர் தீவிரமாக நடைபெற்று வருகின்றது.
இந்நிலையில் இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இஸ்ரேலுக்கு பயணம் செய்துள்ளார்.
டெல் அவிவ் நகரில் உள்ள பென் குரியன் விமான நிலையத்தில் வந்து இறங்கிய அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை இஸ்ரேலிய பிரதமர் நேதன்யாகு நேரில் வரவேற்றார்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய ஜோ பைடன், காசாவில் உள்ள மருத்துவமனை மீது நடத்தப்பட்ட தாக்குதல் மிகவும் வருத்தமான விடயம்.
நான் பார்த்த தரவுகளின் அடிப்படையில் இந்த தாக்குதல் வேறு குழுவினரால் நடத்தப்பட்டதாக தெரியவருகிறது என தெரிவித்தார்.
மேலும் காசாவிற்கான மனிதாபிமான சேவைகளுக்காக (சுமார் 100 மில்லியன் டொலர்) 832 கோடியை அமெரிக்கா வழங்கும் என ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் செய்தியாளர்களிடம் பேசிய இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு, இந்த போர் நாகரிகம் அடைந்தவர்களுக்கும், காட்டுமிராண்டிகளுக்கும் இடையே நடைபெறும் போர் என தெரிவித்தார்.