20 யூரோக்களாக அதிகரித்த Netflix கட்டணம்!

19 ஐப்பசி 2023 வியாழன் 08:48 | பார்வைகள் : 13120
Netflix சேவைகளின் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. மாதாந்தம் அதிகபட்சமாக 20 யூரோக்கள் வரை கட்டணம் அதிகரித்துள்ளது.
இவ்வருடத்தின் ஆரம்பத்தில் Netflix கட்டணம் அதிகரித்ததை அடுத்து, தற்போது மீண்டும் அதிகரித்துள்ளது. குறைந்த வசதிகளை உள்ளடக்கிய ‘Essential’ பாவனைக்கான கட்டணம் 8.99 யூரோக்களில் இருந்து 10.99 யூரோக்களாக அதிகரித்துள்ளது.
HD தரத்தில் பார்வையிடுவதற்கான ‘Premium’ பாவனைக்கான கட்டணம் 17.99 யூரோக்களில் இருந்து 19.99 யூரோக்களாக அதிகரித்துள்ளது.
இந்த கட்டண அதிகரிப்பு ரசிகர்களிடையே விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதேவேளை, விளம்பரங்களுடன் கூடிய சாதாரண Standard பாவனைக்கான கட்டணத்தில் (5.99 யூரோக்கள்) மாற்றமில்லை.