Paristamil Navigation Paristamil advert login

உலகக்கோப்பை போட்டியில் அணிகளின் பலம் தொடர்பில் விராட் கோலி கருத்து

உலகக்கோப்பை போட்டியில் அணிகளின் பலம் தொடர்பில் விராட் கோலி கருத்து

19 ஐப்பசி 2023 வியாழன் 09:11 | பார்வைகள் : 9503


உலகக்கோப்பை போட்டியில் பெரிய அணி என்று எதுவும் கிடையாது என கிரிக்கெட் வீரர் விராட் கோலி பேட்டி அளித்துள்ளார்.

இந்தியாவில் உள்ள பல நகரங்களில் 13 -வது உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. 

இதில், இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து ஆகிய அணிகள் பங்கேற்று தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும்.

அப்போது லீக் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்குள் நுழையும். 

அந்தவகையில் உலகக்கோப்பையில், இந்திய அணி வெற்றிகரமாக தனது ஆட்டத்தை தொடங்கியுள்ளது.

ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் ஆகிய அணிகளை வீழ்த்தி 6 புள்ளிகளுடன் 2 -வது இடத்தை இந்தியா பிடித்துள்ளது.

இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி தொலைகாட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டியில், "உலகக்கோப்பை போட்டியில் பெரிய அணி என்று எதுவும் கிடையாது.

பெரிய அணி என்று குறிப்பிடும் அந்த அணியின் மீது அதிக கவனம் செலுத்த தொடங்கும் போது நெருக்கடிக்கு ஆளாகி தோல்வியை சந்திக்க நேரிடும்" என்றார்.

உலகக்கோப்பை கிரிக்கெட்டி போட்டியில், மஹாராஷ்டிர மாநிலம் புனேவில், இந்திய அணி வங்காளதேசத்தை இன்று எதிர்கொள்கிறது.      

6 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

சதீஸ்குமார் அபிசன்

வயது : 21

இறப்பு : 07 Dec 2025

  • Ecology

    2

வர்த்தக‌ விளம்பரங்கள்