Paristamil Navigation Paristamil advert login

இண்டியா கூட்டணிக்குள் சலசலப்பு !!

இண்டியா கூட்டணிக்குள் சலசலப்பு !!

19 ஐப்பசி 2023 வியாழன் 15:07 | பார்வைகள் : 3323


ம.பி.,யில் இண்டியா கூட்டணியிலுள்ள இரண்டு பெரிய கட்சிகளான காங்.,-சமாஜ்வாடி இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. சமாஜ்வாடி கட்சி, 31 தொகுதிகளுக்கான வேட்பாளரை அறிவித்துள்ளது. 

மத்திய பிரதேசத்தில் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான பாஜ., ஆட்சி நடக்கிறது. மாநிலத்தில் உள்ள 230 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் நவம்பர் 17 ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை வரும் 23ம் தேதி நடைபெறுகிறது. காங்கிரஸ்- பாஜ., இடையே கடும் போட்டி நிலவும் என கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றது. 

ம.பி.,யில் இண்டியா கூட்டணியிலுள்ள இரண்டு பெரிய கட்சிகளான காங்.,-சமாஜ்வாடி இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. சமாஜ்வாடி கட்சி, 31 தொகுதிகளுக்கான வேட்பாளரை அறிவித்துள்ளது. 

இது குறித்து சமாஜ்வாடி கட்சியின் மூத்த தலைவர் ராஜேந்திர சவுத்ரி கூறுகையில், மத்திய பிரதேசத்தில் 5-6 தொகுதிகளுடன் போட்டியிட சமாஜ்வாடி விரும்பியது. ஆனால், காங்கிரஸ் கட்சி ஒரு சீட் கூட கொடுக்கவில்லை. இத்தனைக்கும் இதற்கு முன்பாக சமாஜ்வாடி கட்சி சில இடங்களில் வென்றுள்ளது" என்றார்.

கூட்டணிக்குள் சலசலப்பு?

இது குறித்து காங்கிரஸ் மேலிட தலைமை கருத்து எதையும் தெரிவிக்கவில்லை. காங்கிரஸ் கட்சியின் உத்தர பிரதேச மாநில தலைவர் அஜய் ராய் கூறுகையில், சமாஜ்வாடி கட்சிக்கு மத்திய பிரதேசத்தில் எந்த ஆதரவும் இல்லை என்றார். மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் - சமாஜ்வாடி தனித்தனியே வேட்பாளரை நிறுத்தியிருப்பது கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்