Paristamil Navigation Paristamil advert login

இலங்கையில் அச்சுறுத்தும் மற்றுமொரு ஆபத்து

இலங்கையில் அச்சுறுத்தும் மற்றுமொரு ஆபத்து

19 ஐப்பசி 2023 வியாழன் 10:42 | பார்வைகள் : 9909


இலங்கையில் எலிக்காய்ச்சல் குறித்து அவதானத்துடன் செயற்படுமாறு சுகாதாரத்துறை விவசாயிகளை எச்சரித்துள்ளது.

பெரும்போக பயிர்ச்செய்கை ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் சுகாதாரத்துறையால் குறித்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எலி காய்ச்சலினால் நாட்டில் வருடமொன்றுக்கு 7 ஆயிரம் பேர் வரை பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், 125 பேர் வரை உயிரிழப்பதாகவும் சுகாதாரத்துறை குறிப்பிட்டுள்ளது.
 
20 முதல் 60 வயதுக்கு இடைப்பட்டவர்களே எலி காய்ச்சலுக்கு உள்ளாகுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், அதிக காய்ச்சல், தலைவலி, இடுப்புவலி, சிறுநீரின் நிறம் மாற்றம் அடைதல், கண்கள் சிவத்தல், வாந்திபேதி மற்றும் வயிற்றுப்போக்கு போன்றவை எலிக்காய்ச்சலுக்கான அறிகுறிகளாகும்.

எனவே, இவ்வாறான அறிகுறிகள் காணப்படுமாயின் வைத்தியரை நாடுமாறும் சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

வர்த்தக‌ விளம்பரங்கள்