Pôle Emploi ஊழியருக்கு அச்சுறுத்தல் விடுத்த ஒருவர் கைது!
19 ஐப்பசி 2023 வியாழன் 12:19 | பார்வைகள் : 11924
Pôle Emploi ஊழியருக்கு கொலை மிரட்டல் விடுத்த ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த கைது சமப்வம் நேற்று ஒக்டோபர் 18, புதன்கிழமை Lille நகரில் இடம்பெற்றுள்ளது.
rue Vaucanson (Lille) வீதியில் அமைந்துள்ள Pôle Emploi அலுவலகத்துக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட ஒருவர், அங்கு பணியாற்றிய ஊழியருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
Pôle Emploi இல் பதிவு செய்யப்பட்டு நீண்ட நாட்கள் ஆகிறது எனவும், அவரது கோப்பு (dossier) எவ்வித முன்னேற்றத்தையும் காணவில்லை எனவும் தெரிவித்து, துப்பாக்கியால் சுட்டுவிடுவேன் எனவும் அச்சுறுத்தியுள்ளார்.
அதையடுத்து, மேற்படி அச்சுறுத்தல் விடுத்த நபரை காவல்துறையினர் நேற்று மாலை கைது செய்துள்ளனர். 1995 ஆம் நவம்பரில் பிறந்த குறித்த நபர் தற்போது காவல்துறையினரின் கட்டுப்பாட்டுக்குள் உள்ளார்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan