கார்த்திகாவுக்கு விரைவில் திருமணம்?
19 ஐப்பசி 2023 வியாழன் 13:57 | பார்வைகள் : 7070
நடிகை ராதாவின் மூத்த மகளான கார்த்திகா, கேவி ஆனந்த் இயக்கத்தில் ஜீவா நடித்த ’கோ’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதனை அடுத்து அவர் பாரதிராஜா இயக்கத்தில் உருவான ’அன்னக்கொடி’ மற்றும் விஜய் சேதுபதி நடித்த ’புறம்போக்கு என்ற பொதுவுடமை’ ஆகிய படங்களில் நடித்தார். ஒரு சில தெலுங்கு மற்றும் கன்னட படங்களிலும் அவர் நடித்துள்ளார்.
இந்நிலையில் நடிகை கார்த்திகா தனது சமூக வலைத்தளத்தில் நிச்சயதார்த்த மோதிரம் அணிந்த புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். இதையடுத்து அவருக்கு சமீபத்தில் தான் நிச்சயதார்த்தம் முடிந்திருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இருப்பினும் அவர் தனது வருங்கால கணவர் யார் என்பதை இதுவரை தெரிவிக்கவில்லை என்றாலும் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


























Bons Plans
Annuaire
Scan