குரல்வளை மற்றும் கருப்பை புற்றுநோய்கள் இப்போது தொழில்சார் நோய்கள். இழப்பீடு பெறலாம்.
19 ஐப்பசி 2023 வியாழன் 19:45 | பார்வைகள் : 5918
கடந்த 15 ஒக்டோபர் பிரான்சின் 'Journal Officiel' வர்த்தமானி அறிவித்தலில் 'l'amiante' அதாவது தலைமுடியை விடவும் பலமடங்கு மெலிதான 'கல்நார்' தூசியை உள்ளிழுப்பதன் விளைவாக ஏற்படும் குரல்வளை மற்றும் கருப்பை புற்றுநோய்கள் இப்போது தொழில்சார் நோய்களாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. தகுதியுள்ள தொழிலாளர்கள் தங்கள் ஆரம்ப சுகாதார காப்பீட்டு நிதியைத் தொடர்புகொண்டு இழப்பீட்டுக்கான கோரிக்கையைச் சமர்ப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
20 ஆம் நூற்றாண்டில் கட்டிடங்கள் கட்டுவதில் பல தசாப்தங்களாக பயன்படுத்தப்பட்ட 'l'amiante' கல்நார், இப்போது பிரான்ஸ் போன்ற பல நாடுகளில் 1997 முதல் தடை செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் 2019 முதல் 2050 வரையான காலப் பகுதியில் இதனை சுவாசித்த தொழிலாளர்களில் 68.000 முதல் 100.000 பேர் l'amiante' சுவாசித்ததால் பாதிப்படையும் நிலை ஏற்படும், இதனால் பல இறப்புகள் எனவும் கணிப்பிடப்பட்டுள்ளது.
2005 முதல் ஐரோப்பாவில் பல மில்லியன் கட்டிடங்கள் 'l'amiante' கல்நார் பாவிக்கப்பட்டு கட்டப்பட்டுள்ளது. இதனை சுவாசித்த 70.000 தொழிலாளிகள் இறப்புக்கு இது காரணமாக உள்ளது எனவே குரல்வளை மற்றும் கருப்பை புற்றுநோய்கள் இப்போது தொழில்சார் நோய்களாக தரப்படுத்தப்பட்டுள்ளது என 'Journal Officiel' வர்த்தமானி அறிவித்தல் தெரிவித்துள்ளது.