Paristamil Navigation Paristamil advert login

காசாவில் ஏற்பட்டுள்ள அவல நிலை...

காசாவில் ஏற்பட்டுள்ள அவல நிலை...

17 ஐப்பசி 2023 செவ்வாய் 08:26 | பார்வைகள் : 6816


இஸ்ரேலிய படைகளுக்கும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே 10வது நாளாக போர் நீடித்து வருகிறது.

ஹாமஸ் அமைப்பினரின் தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல் குடி தண்ணீர், மின்சாரம் ஆகியவற்றை தடை செய்துள்ளது.

இதனால் பாலஸ்தீனத்தில் வாழும் மக்கள் குடிக்க, குளிக்க, அத்தியாவசியத் தேவைகளுக்காக தண்ணீருக்காக காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் காசாவின் தெற்கே உள்ள ரஃபா எல்லையில் உள்ள 7 குழந்தைகளின் தாய் மற்றும் 23 வயது பெண்மணியான அகமது ஹமீது தண்ணீர் தட்டுப்பாடு குறித்து விளக்கியுள்ளார்.

அதில், "நான் குளித்து சில நாட்கள் ஆகிவிட்டது. கழிவறை செல்வது கூட கடினமாக உள்ளது, தண்ணீர் பற்றாக்குறையால் மக்கள் வரிசையில் காத்திருக்க வேண்டியுள்ளது. 


கடைகளில் எந்தவொரு பொருட்களும் இல்லை. அப்படியே ஓரிரு இடங்களில் ஏதாவது பொருட்கள் கிடைக்கின்றன, அவ்வாறு கிடைத்தாலும் விலை உச்சத்தில் இருக்கிறது.

 கடைகளில் கொஞ்சம் சீஸ் துண்டுகள், டூனா மீன் கேன்களும் மட்டுமே இருக்கின்றன. 

இந்த சூழ்நிலையை மிகுந்த கடுமையாக  உணர்கிறோம் ஏதும் செய்ய இயலாதவளாக இருக்கிறேன்" என தெரிவித்துள்ளார். 

வர்த்தக‌ விளம்பரங்கள்