அமெரிக்காவில் சராமரி துப்பாக்கிச்சூடு நடத்திய மர்ம நபர்!

17 ஐப்பசி 2023 செவ்வாய் 09:04 | பார்வைகள் : 8600
அமெரிக்கா - டெக்சாஸ் மாகாணத்தின் முக்கிய நகரான டல்லாசில் அரசு சார்பில் கண்காட்சி நிகழ்த்தப்பட்டு இருந்தது.
கண்ணை கவரும் அலங்கார விளக்குகள், விதவிதமான உணவு பண்டங்கள், கேளிக்கை நிகழ்ச்சிகளை ரசித்து களித்தப்படி பொதுமக்கள் உற்சாகமாக வலம் வந்தனர்.
இதன்போது, மர்மநபர் ஒருவர் கண்காட்சிக்குள் திடீரென புகுந்து அவர் மறைத்து வைத்திருந்த கைத்துப்பாக்கியை கொண்டு சரமாரி தாக்குதலில் ஈடுபட்டார்.
இதனால் பொதுமக்கள் அலறி அடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். கூட்ட நெரிசல் காரணமாக பலருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது.
குறித்த தாக்குதலில் மூன்று பேர் உடலில் குண்டு பாய்ந்து படுகாயம் அடைந்தனர்.
அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.
சம்பவம் தொடர்பில் தகவலறிந்த பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தாக்குதல் நடத்திவிட்டு தப்பியோடிய மர்மநபரை மடக்கி பிடித்தனர்.
பின்னர் அவரை கைது செய்து விசாரித்து வருவதாக தெரிவித்துள்ளனர்.
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025