Paristamil Navigation Paristamil advert login

இலங்கையில் வெள்ள அபாய எச்சரிக்கை

இலங்கையில் வெள்ள அபாய எச்சரிக்கை

17 ஐப்பசி 2023 செவ்வாய் 09:11 | பார்வைகள் : 7438


நில்வளா கங்கையின் தாழ்நிலப்பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை மேலும் 24 மணித்தியாலங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த ஆற்றை அண்மித்த தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகவும் அவதானமாக செயற்படுமாறு அந்த திணைக்களம் கோரியுள்ளது.

அத்துடன், சீரற்ற காலநிலை காரணமாக, இதுவரை 2 ஆயிரத்து 297 குடும்பங்களைச் சேர்ந்த 8 ஆயிரத்து 724 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, இன்று காலை பெய்த பலத்த மழைக் காரணமாக கொழும்பு, மருதானை, பத்தரமுல்லை உள்ளிட்ட பகுதிகளிலுள்ள சில வீதிகள் நீரில் மூழ்கியுள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்