Paristamil Navigation Paristamil advert login

AI பெண் தோழியை துணையாக ஏற்கும் ஆண்கள் அதிகரிப்பு! 

AI பெண் தோழியை துணையாக ஏற்கும் ஆண்கள் அதிகரிப்பு! 

17 ஐப்பசி 2023 செவ்வாய் 09:10 | பார்வைகள் : 4885


அமெரிக்காவில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் ஆண்கள் AI பெண் தோழிகளை விரும்புவது அதிகரித்து வருவதாக தெரிய வந்துள்ளது.

AI எனும் ஆங்கில வார்த்தை தற்போதைய டிஜிட்டல் உலகில் பரவலாக பயன்படுத்தப்படும் வார்த்தையாக மாறிவிட்டது.

செயற்கை நுண்ணறிவின் அபரிவிதமான வளர்ச்சி ஒரு பக்கம் நன்மை என்றாலும், வேலை வாய்ப்பு பறிபோகும் அச்சம், நிஜ உலகில் இருந்து தொலைந்துபோவது என சிக்கல்களையும் சந்திக்க வேண்டியுள்ளதாக கூறப்படுகிறது. 

இந்த நிலையில் அமெரிக்காவில் செயற்கை நுண்ணறிவு பெண் தோழிகள் ( AI girlfriends ) என்பது மிக வேகமாக அதிகரித்து வருவதாக தெரிய வந்துள்ளது.

இதுதொடர்பாக ஆய்வு மேற்கொண்ட பேராசிரியர் லிபர்டி, மாணவர்களிடம் ஸ்மார்போன் குறித்து கேள்வி எழுப்பியபோது அவர்கள் அளித்த பதில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ஒரு மாணவர் தனக்கு செயற்கை நுண்ணறிவு தோழி இருப்பதாக கூறினார். Replika எனும் சமீபத்திய பிரபலமான செயலி, AI பெண் தோழியை அறிமுகம் செய்துள்ளது. இதன்மூலம் கடந்த ஆண்டு ஒரு கோடிக்கும் மேற்பட்டோர் பயன்படுத்தி வந்துள்ளனர்.

2022ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி 63 சதவீதம் ஆண்கள் துணை இல்லாமல் இருப்பதாகவும், 34 சதவீதம் பெண்கள் மட்டுமே தனியாக இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது. இதனால் பெரும்பாலான ஆண்கள் துணை வேண்டி AI பெண் தோழிகளை நாடுகின்றனர் என்கிறார் லிபர்டி.  

இதுவும் ஒரு காரணம் என்று கூறும் அவர், 'AI பெண் தோழி உங்களிடம் இருந்து எல்லா விடயங்களையும் கற்றுக் கொண்டு, உங்களை முழுமையாக கணித்துவிடும். பெண்களைப் போல் சோகம், கோபம் போன்ற உணர்வுகள் இவற்றுக்கு இல்லை.

அதனாலேயே ஆண்கள் வெளியே பெண் உறவை தேடுவதற்கு பதிலாக AI பெண் தோழிகளை அதிகம் விரும்புகிறார்கள். இது இளைஞர்களிடம் தொற்றுநோயாக பரவி வருகிறது.


இதுபோன்ற AI பெண் தோழிகள் சில ஆண்டுகளுக்கு முன்பில் இருந்தே நடைமுறையில் இருந்தாலும், தற்போது இதை பலரும் பயன்படுத்துவதையும், இதுகுறித்து பேசுவதையும் அதிகமாக பார்க்க முடிகிறது' என தெரிவித்தார். 


 

வர்த்தக‌ விளம்பரங்கள்