Paristamil Navigation Paristamil advert login

பிரித்தானியா நோக்கி பயணித்த அகதிகள் மீட்பு!

பிரித்தானியா நோக்கி பயணித்த அகதிகள் மீட்பு!

17 ஐப்பசி 2023 செவ்வாய் 11:26 | பார்வைகள் : 7058


பல்வேறு சிறிய படகுகளில் பிரித்தானியா நோக்கி பயணித்த 70 அகதிகளை கடற்படையினர் மீட்டுள்ளனர்.

ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு தொடக்கம் திங்கட்கிழமை காலை வரை அடுத்தடுத்து பல்வேறு படகுகளில் பா து கலே (Pas-de-Calais) கடற்பிராந்தியத்தில் இருந்து பிரித்தானியா நோக்கி அவர்கள் பயணித்துள்ளனர். சிறிய பாதுகாப்பில்லாத படகுகளில் அவர்கள் பயணம் செய்ததாகவும், அவர்கள் அனைவரையும் கடற்படையினர் மீட்டு, கரைக்கு அழைத்து வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாண்டில் மட்டும் பிரான்சில் இருந்து பிரித்தானியாவுக்கு 100,000 அகதிகளுக்கு மேல் கடல்மார்க்கமாக சென்றடைந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2021 ஆம் ஆண்டு நவம்பரின் இதுபோன்ற அகதிகள் படகு ஒன்று கடலில் மூழ்கியதில் 27 அகதிகள் பலியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வர்த்தக‌ விளம்பரங்கள்