Paristamil Navigation Paristamil advert login

பிக்பாஸ் இல் பரபரப்பை ஏற்படுத்திய கூல்சுரேஷ்..!

பிக்பாஸ் இல் பரபரப்பை ஏற்படுத்திய கூல்சுரேஷ்..!

17 ஐப்பசி 2023 செவ்வாய் 12:03 | பார்வைகள் : 6926


விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் இன்றைய முதல் புரோமோவில் மாயாவை கூல் சுரேஷ் கதறியழ வைத்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

காமெடியாக ராசிபலன் கூறும் கூல் சுரேஷ் திடீரென விசித்ரா காலில் விழுந்தது பரபரப்பை ஏற்படுத்தியது என்றால் அதன்பின் அவர் மாயா குறித்து பேசியது தான் சர்ச்சைக்குள்ளானது.

மறைஞ்சிருந்து பார்க்கிற மாயா, நீ இந்த பக்கம் கொஞ்சம் வாயா, வேண்டாம் என காமெடியாக கூறியதை சக போட்டியாளர்கள் அனைவரும் ரசித்தாலும் மாயா முறைத்து கொண்டு பார்க்கிறார். இதனை அடுத்து அவர் மீண்டும் ’மாயா பயங்கர காண்டாக இருக்கிறார்’ என்று கூறியது மாயாவுக்கு அதிர்ச்சியாக இருந்தது.

இதனையடுத்து நேரடியாகவே கூல் சுரேஷ் இடம், ‘நீங்கள் என்னை பற்றி சொன்ன விஷயங்களை எதுவும் எனக்கு பிடிக்கவில்லை, உங்களுக்கு கைதட்டல் வேண்டும் என்பதற்காக இப்படி செய்யலாமா? என்று கேட்கிறார்

பூர்ணிமாவும் மாயாவுக்கு ஆதரவாக பேசுகிறார். மொத்தத்தில் மாயா, கூல் சுரேஷ் இடையே இன்று பெரிய பிரச்சனை ஏற்பட வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.

வர்த்தக‌ விளம்பரங்கள்