ஒலிம்பிக் போட்டிகளில் சேர்க்கப்படும் கிரிக்கெட்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு
21 ஐப்பசி 2023 சனி 07:25 | பார்வைகள் : 2361
ஒலிம்பிக்கில் கிரிக்கெட் சேர்க்கப்பட்டுள்ள நிலையில் ஓவர் ஃபார்மட் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
2028 -ம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சலில் ஒலிம்பிக் போட்டி நடைபெறவுள்ளது.
இந்நிலையில், ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டை சேர்க்க வேண்டும் என்று பல நாள் கோரிக்கை வைத்த நிலையில் 2028 -ம் ஆண்டு நடைபெற இருக்கும் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் சேர்க்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல், கிரிக்கெட்டுடன் ஸ்குவாஷ், பேஸ்பால், ஃபிளாக் கால்பந்து மற்றும் லாக்ரோஸ் ஆகிய 5 விளையாட்டுகளை சேர்ப்பதாக ஒலிம்பிக் ஒருங்கிணைப்பு குழு தெரிவித்தது.
கடைசியாக 1900 -ம் ஆண்டு பாரிசில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட் விளையாடப்பட்டது.
128 ஆண்டுகளுக்கு பிறகு ஒலிம்பிக்கில் கிரிக்கெட் விளையாடப்படவுள்ளதால் ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் உற்சாகமாக உள்ளனர்.
2028 -ம் ஆண்டு நடைபெறும் ஒலிம்பிக் தொடரில் விளையாடப்போகும் கிரிக்கெட்டில் எத்தனை ஓவர்கள் இருக்கும் என்ற முடிவை சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி இறுதி செய்யாமல் இருந்தது.
இந்நிலையில், அது 20 ஓவர் போட்டியாக நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒலிம்பிக்கில் கிரிக்கெட் இடம்பெறுவதால், உலக கோப்பைக்கு சமமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.